Ad Widget

இலங்கை தொடர்பான அமெரிக்க பிரேரணை நிறைவேறியது

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டஆதரவாக இந்தியா உட்பட்ட 24 நாடுகளும் எதிராக சீனா மற்றும் ரஸ்யா உட்பட்ட 15 நாடுகள் எதிராகவும் வாக்களித்துள்ளன..இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த வாக்கெடுப்பில் 8 நாடுகள் கலந்துகொள்ளவில்லை.

இலங்கை தொடர்பில் அமெரிக்கா மிதமான சமச்சீரான பிரேரணை ஒன்றையே ஐநா மனித உரிமை கவுன்ஸிலில் முன்வைத்துள்ளதாகவும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைகளை செயற்படுத்த வைப்பதே பிரேரணையின் நோக்கம் எனவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.யுத்தம் முடிந்து இலங்கை தனது வழியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த 3 வருடங்கள் கால அவகாசம் இருந்ததாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

இதில் கலந்து கொண்டு பேசிய நாடுகளில் கியூபா, சீனா, எக்குவடோர், ரஷ்யா, உருகுவே, கிரிகிஸ்தான்,தாய்லாந்து,பிலிப்பைன்ஸ் , உகண்டா,மாலைதீவு,பங்களாதேஷ் என்பன இலங்கைக்கு ஆதரவாகப் பேசின. அதாவது தீர்மானத்தை எதிர்த்தன. உள்நாட்டுப் பொறி முறையே போதும் என்பதுதான் அவர்களின் வாதம்.

ஆனால் இங்கு பேசிய இலங்கையின் பிரதிநிதி மகிந்த சமரசிங்கே, ‘கண்ணாடி வீட்டிலில் இருந்து கல் எறிய வேண்டாம்’ என்று எச்சரித்ததோடு, இதற்கு ஒத்துழைப்பு வழங்க மாட்டோமென சூளுரைத்தார்.

காலை 9.30 மணிக்கு ஆரம்பமான அமர்வுகளில் நடைபெற்ற விடயங்கள் பின்வருமாறு !

அமெரிக்கா: முதலில் பேசியது. அது தான் கொண்டுவந்துள்ள பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவாலம் எனத் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து கியூபா நாட்டு பிரதிநிதி பேச ஆரம்பிக்கிறார் !

கியூபா நாடு: கியூபா நாட்டுப் பிரதிநிதி பேசும்போது, இப் பிரேரணையை வரும் செப்டெம்பர் மாதம் வரை ஒத்திவைக்க கேட்டுக்கொண்டார்.

அமெரிக்கா: அமெரிக்கா இதனை நிராகரித்தது.

கியூபா : குறுக்கிட்டு, இலங்கையின் இறையாண்மை பாதுகாக்கப்படவேண்டும் என்றும், இலங்கையின் உள் நாட்டு விவகாரங்களில் ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் தலையிடக்கூடாது என்றும், கூறுகிறது. இலங்கையை மிகவும் ஆதரித்து பேசியுள்ள முதலாவது நாடு கியூபா ஆகும் !

பெல்ஜியம்: பெல்ஜியம் தாம் ஐரோப்பிய ஒன்றியத்தோடு ஒன்றிணைந்து செயல்படுவதாகவும், அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணையை ஆதரிப்பதாகவும் தெரிவித்தது.

செக் ரிப்பப்பிளிக்: இந் நாடு அமெரிக்காவுக்கு ஆதரவாகப் பேசியதோடு, தாம் பிரேரணையை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளது.

சீனா: சீனா மிகவும் குறுகிய நேரமே பேசியுள்ளது. தாம் இந்தப் பிரேரணையை விரும்பவில்லை என்பது அவர்களின் வாதம் !

இலங்கை: இலங்கைக் குழு பேசும்போது கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறியவேண்டாம் என அமைரிக்காவைப் பார்த்து எச்சரித்தார் மகிந்த சமரசிங்க. அவர் பேச்சு மிகவும் கடுமையான தொனியில் அமைந்தது.

இதனை அடுத்து கியூபா நாடு பேசியுள்ளது: அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம், தாக்குதல் நடத்துகிறது. குவாண்டமானோ சிறைச்சாலையில் கைதிகளை படு மோசமாக நடத்துகிறது. லிபியா போன்ற நாடுகளில் ஊடுருவுகிறது இதனைப் பற்றி ஏன் இம் மாநாட்டில் பேசவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய கியூபா நாட்டுக் குழு, அமெரிக்கவும் பிரித்தானியாவும் இலங்கைக்கு 2009ம் ஆண்டு ஆயுதங்களை வழங்கியது எனச் சாடினார். இன்று நடைபெறும் மாநாட்டில் கியூபா நாடு பேச்சாளர் மேசையில் இருப்பதால், அவர்கள் தொடர்ந்து தமது விமர்சனங்களை முன்வைக்ககூடியதாக உள்ளது:

ஈகுவட்டோர்: அமெரிக்காவின் பிரேரணைய எதிர்த்தும், இலங்கைக்கு ஆதரவாகவும் பேசியுள்ளது.

ருஷ்யா: ருஷ்யா பேசும்போது உள் நாட்டு விடையங்களில் தலையிடவேண்டாம் என்று கூறியது: அமெரிக்க பிரேரணைய எதிர்க்கும் என்று தெரிவித்துள்ளது.

உருகுவே: அமெரிக்க பிரேரணைக்கு ஆதரவு.

குகிதிஸ்தான்: நடு நிலையகப் பேசியுள்ளது.

தாய்லாந்து: அமெரிக்க பிரேரணைக்கு ஆதவாகப் பேசியுள்ளது.

நைஜீரியா: அமெரிக்காவுக்கு ஆதரவாகப் பேசியுள்ளது.

பிலிப்பைன்ஸ்: தாம் அமெரிக்க பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கப்போவதாகப் பேசியுள்ளது.

உகண்டா : தாம் அமெரிக்காவுக்கு எதிராப் பேசியுள்ளது. அது இலங்கையை ஆதரிக்கும் எனத் தெரிவித்துள்ளது.

சீனா: தாம் எதிர்ப்பதாக திரும்பவும் தெரிவித்துள்ளது. அது இலங்கையை ஆதரித்து பேசியுள்ளது.

மாலைதீவு: இந் நாட்டு தூதுக்குழு தெரிவிக்கையில், தாம் இலங்கையின் நண்பர்கள் எனவும் அதனால் தாம் அமெரிக்கா கொண்டுவந்துள்ள பிரேரணைய எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியா: தாம் அமெரிக்கா கொண்டு வந்துள்ள பிரேரணையை எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளது.

பங்களாதேஷ்: தாமும் அமெரிக்கா கொண்டுவந்துள்ள பிரேரணைய எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளது.

மெக்சிகோ மெக்சிக்கோ தூதுக் குழு தெரிவிக்கையில், தாம் அமெரிக்கா கொண்டுவந்துள்ள பிரேரணைய ஆதரிப்பதாத் தெரிவித்துள்ளனர். இன்று காலை தம்மை அணுகிய சிலர் தமக்கு சில விளக்கங்களைக் கொடுத்துள்ளதாகவும், அதனால் தாம் உண்மை நிலையை அறிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து பிரித்தானிய நேரம் காலை 10.47 மணிக்கு வாக்கெடுப்பு ஆரம்பமானது

Related Posts