Ad Widget

இலங்கை இராணுவத்துக்கு எதிரான திரைப்படத்துக்கு குரல் கொடுத்த 8 பேர் கைது

இலங்கை இராணுவத்துக்கு சேறுபூசும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்துக்கு குரல் கொடுத்துகொண்டிருந்த 8 பேரை கைது செய்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வடக்கையைச்சேர்ந்த ஐவரும் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த மூவரும் அடங்குவதாக தெரிவித்த பொரளை பொலிஸார் திரைப்படமும் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.

நாரஹேன்பிட்டியவிலுள்ள வீடொன்றில் வைத்து குரல் கொடுத்துகொண்டிருந்த போதே சனிக்கிழமை(28) அவர்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த திரைப்படத்தில் ஜெனீவா மனித உரிமை பேரவைக்கு கையளிக்கும் வகையிலான விடயதானங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபர்கள் எண்மரையும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த மூவரும் இந்த திரைப்படத்துக்கு சிங்கள குரல் கொடுப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட எட்டு பேரில், இருவர் இந்தியாவில் வசித்ததாகவும் மூவர், யுத்தக்காலத்தில் வடக்கில் இருந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்றத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட சோதனை பிடியாணை ஊடாகவே இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. திரைப்பட்டத்தை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts