Ad Widget

இலங்கையில் தற்போதும் கரும்புலிகள்!!!

இலங்கையில் அழிந்துவிட்டது என கருதப்படும் கரும்புலி இனம் தற்போதும் வாழுகின்றது என வனஜீவராசிகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

உலகில் உள்ள 8 புலி இனங்களில் இலங்கை புலி இனங்கள் அரிதாகக் காணப்பட்டமையினால் அவை மிகவும் விசேடமானவையாக கருதப்பட்டன. இதுவரை காலம் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட கரும்புலி இனம் இலங்கை புலி இனத்தில் கிளை இனமாகவும் வர்ண வித்தியாச இனமாகவும் கருதப்படுகிறது.

பிட்டதெனிய மபிள்தெனிய Mawuldeniya, Pitadeniya சூழவுள்ள பகுதியில் பொறியில் சிக்கி உயிழந்த புலியே இறுதி கரும்புலி இனமாக இதற்குமுன்னர் பதிவாகியிருந்தது. இதற்கமைய இந்த புலியின் தோலினை பயன்படுத்தி கிரிதலே Girithale wildlife museum வனஜீவராசிகள் அருங்காட்சியகத்தில் கரும்புலியொன்று நிர்மானிக்கப்பட்டுள்ளது. இது இறுதி கரும்புலி என சாட்சியாக கருதப்பட்டு அமைக்கப்பட்டது.

எனினும் வனஜீவராசிகள் திணைக்களம் எடுத்த நீண்ட ஆய்வு இலங்கையில் புலிகள் தொடர்பான ஆய்வை மாற்றியமைத்தது. கரும்புலியின் நடமாட்டம் உள்ளதாக தகவல் கிடைத்த நிலையில் அங்கு நடமாடிய இடங்களில் வனஜீவராசிகள் திணைக்களம் தன்னியக்க கட்டுப்பாட்டு கமராக்களை பொருத்தியதுடன் அதில் ஒரு இடத்தில் மாத்திரம் கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி கரும்புலி நடமாடிய அரிய காட்சி பதிவாகியுள்ளது. இதனை பின்தொடர்ந்த வனஜீவராசிகள் திணைக்களம் தமது கமராவில் காணொளிகள் சிலவற்றை பதிவு செய்து இலங்கையில் கரும்புலிகள் இன்னும் வாழ்கின்றது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய இந்த கரும்புலியுடன் இலங்கையின் கிளை புலி இனத்துக்குரிய பெண் உயிரினமும் 2 குட்டிகளுடன் ஒரு ஆண் இனமும் வாழ்கின்றது என்பது உறுதியாகியுள்ளது.

வனஜுவராசிகள் திணைக்களத்தின் டொக்டர் மாலக்க அபயவர்த்தன, மனோச் அக்கலங்க ஆகியோரின் தலைமையில் இந்த ஆய்வு முன்னெடுத்துள்ளது. இந்த ஆய்வினை முன்னெடுக்க T Tropical Eco-System Research Networks Organization.அமைப்பு உதவியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts