Ad Widget

இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான போர் முடியடையவில்லை – சரா எம். பி

Saravanabavan _sara -mpகல்விக்கு கைகொடுப்போம் என்னும் தொனிப்பொருளில் மறைந்த தினக்குரல் ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபனின் அஞ்சலி நிகழ்வு நேற்று நடைபெற்றது.

செந்தமிழ் விளையாட்டுக்கழக தலைவர் ஜெயந்தன் தலைமையில் நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் அராலி மத்தி அம்பாள் கடற்றொழிலாளர் சங்க மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் உதயன் குழுமப் பணிப்பாளருமாகிய ஈ.சரவணபவன் கலந்துகொண்டிருந்தார்.

இதன் போது இயற்கை மரணமடைந்த ஊடகவியலாளர் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் உதயன் குழுமப் பணிப்பாளருமாகிய ஈ.சரவணபவன்.

இத்தகைய இயற்கை மரணம் எய்தியவர்களை விட ஆயுததாரிகளின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தவர்கள் தான் அதிகம்.

தமிழ் மக்கள் தரப்பு நியாயத்தை எடுத்துக்கூறும் நபர்களை இனம் கண்டு அவர்களை இல்லாது செய்வதன் மூலம் அந்த நியாயத்தி எடுத்துரைப்பதைத் தடுப்பது, அவ்வாறு செய்ய முன் வருபவர்களை இந்த நடவடிக்கையின் மூலம் அச்சமூட்டப்பட்டிருந்தது

மேலும் மெல்ல மெல்ல தெற்கில் சிங்கள் மக்களிடயே உருவாக்கி வந்த தமிழர் தரப்பு நியாயத்திற்கான குரல்களை நசுக்கிவிடுவது அவ்வாறு வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் உண்மை நிலவரங்களை எடுத்துரைத்தவர்களை அழித்தொழிப்பதன் மூலம் தெற்கை தமது சிங்கள் பௌத்தப் பேரினவாதக் கருத்து மேலன்மைக்குள் எப்போதும் வைத்திருப்பது என நீண்டு செல்லும் திட்டமிடலின் ஒரு பகுதிதான் இந்த ஊடகவியலாளர்கள் மீதான அடக்கு முறைகள்.

இந்த நிலையில் தமிழர் தரப்பு நியாயங்களை சர்வதேசத்திடமும், மக்களிடமும் எடுத்துச்சென்ற ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் குறிவைத்து தாக்கப்பட்டனர் இதில் தமிழ் நெற் ஆசிரியர் டி.சிவராமிலிருந்து சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க வரை இந்த படுகொலை பட்டியல் நீண்டு செல்கின்றது.

அரசாங்கத்தை அல்லது அதன் படையினரை விமர்சிப்பவர்களைத் தேசத்தின் துரோகிகளாக இனங்காட்டிவிட்டு அவர்களுக்கெதிரான நடவடிக்கையை அரசாங்கம் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது.

நாட்டில் போர் நடைபெற்ற காலம் முதல் இன்று வரை ஊடகவியலாளருக்கு எதிரான போர் விரிவடைந்து கொண்டே வருகின்றது, இதனால் நாட்டை விட்டு வெளியேறும் ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில் அமெரிக்காவின் வோஸ்டோக் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையின் படி ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காம் இடத்தில் உள்ளது இது கடந்த ஆம் ஆண்டு முதல் ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பாடுகளை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக்கொண்டு இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இன் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர் தா.சித்தார்த்தன் வலி. மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி. ஐங்கரன் மற்றும் சிறுவர்கள் ,பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை இந்த நிகழ்வில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜெகநாதன் மற்றும் அவர்களது நண்பர்கலின் நிதியில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டிருந்தது.

Related Posts