Ad Widget

இலங்கைக்கு தொழிநுட்ப உதவிகளை வழங்கத் தயார்: அவுஸ்ரேலியா

இலங்கையின் சக்திவள துறைகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு தேவையான தொழிநுட்ப உதவிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெறும் இந்துசமுத்திர பிராந்திய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரி, நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) அவுஸ்ரேலிய பிரதமருடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது ஆஸி.பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையுடன் பொருளாதாரம் மற்றும் வர்த்தக ரீதியான உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாக தெரிவித்த அவுஸ்ரேலிய பிரதமர், ஜனாதிபதி மைத்திரியை தமது நாட்டிற்கு வருமாறும் இதன்போது அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை, இந்திய துணை ஜனாதிபதி மொஹமட் ஹமீட், தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஸூமா, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களையும் ஜனாதிபதி மைத்திரி சந்தித்துள்ளார்.

Related Posts