Ad Widget

இராணுவ முகாமில் வெடிப்பு; ஒருவர் காயம்

பளை இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவமொன்றில் படுகாயமடைந்த இரர்ணுவ வீரர் ஒருவர், பலாலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த முகாமில், துப்பாக்கியொன்று தவறுதலாக வெடித்ததிலேயே மேற்படி வீரர் படுகாயமடைந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை (21) மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.

டி.சமன்திலக (வயது 31) என்ற இராணுவ வீரரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

அவர் தனது கையில் வைத்திருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்ததிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இராணுவத்தினர் மேலும் தெரிவித்தனர்.

Related Posts