Ad Widget

இராணுவத்தினரின் மோட்டார் சைக்கிள் திருட்டு

Theft_Plane_Sympol-robberyஇராணுவத்தினருடைய மோட்டார் சைக்கிளொன்று திருடப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் இராணுவத்தினரால் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்.ஆஸ்பத்திரி வீதியிலுள்ள மருந்தகம் ஒன்றில் மருந்து வாங்குவதற்காக நேற்று பிற்பகல் வந்த இராணுவத்தினருடைய மோட்டார் சைக்கிளே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Related Posts