Ad Widget

இரண்டாவது நடைபவனியும் ஆரம்பம்

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை சமூகத்தினரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த நடைபவனி, தெல்லிப்பழை வைத்தியசாலையில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (07) காலை ஆரம்பமாகியது.

காலி மாவட்டத்திலுள்ள கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் வைத்தியசாலை ஒன்றை அமைக்கும் நோக்கில் களேஸ் ஒவ் கரீஜ் நிதியத்தினரின் ஏற்பாட்டில் பருத்தித்துறையிலிருந்து தெற்கு நோக்கிய நடைபவனி வியாழக்கிழமை (06) பருத்தித்துறை முனைப்பகுதியில் இருந்து ஆரம்பமாகியது.

இந்த நடைபவனி தற்போது பருத்தித்துறை வீதிவழியாக துரையப்பா விளையாட்டரங்கை வந்தடைகின்றது.

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை அமைப்பதற்கு இவ்வாறான நடைபவனியொன்றின் மூலம் நிதி சேகரித்தமையால், அதற்கு கைமாறு செய்யும் முகமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை சமூகம், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கம் ஆகியன இணைந்து தனியாக நடைபவனி நடத்தி நிதி சேகரிக்கப்படுகின்றது.

இந்நிதி, துரையப்பா விளையாட்டரங்கில் வந்து சேரும் தெற்குக்கான நடைபவனி ஏற்பாட்டாளர்களிடம் கையளிக்கப்படுகின்றது.

தெற்குக்கான நடைபவனியில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்த்தன ஆகியோர் கலந்துகொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts