இன்று நள்ளிரவில் மிகத் தீவிர சூறாவளியாக மாறும் ‘அர்னாப்’ – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ‘அர்னாப்’ (ARNAB) சூறாவளி இன்று (26) நள்ளிரவுக்குள் மிகத் தீவிர சூறாவளியாக வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.

வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய மற்றும் அதனை அண்மித்த தென்கிழக்கு கடற்பகுதிகளில் உருவான இந்த வானிலை அமைப்பு மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று (26) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அஜித் விஜேமான்ன, சர்வதேச வானிலை முன்னறிவிப்பு மாதிரிகளின்படி, இன்று நள்ளிரவுக்குள் இந்தச் சூறாவளி மிகத் தீவிர சூறாவளியாக மாறுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சூறாவளியால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் ஏற்படாது எனத் தெரிவித்த அவர், எதிர்வரும் ஒக்டோபர் 28ஆம் திகதி வரை அதன் மறைமுகத் தாக்கங்கள் இலங்கையில் காணப்படக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் எதிர்வரும் சில நாட்களுக்கு மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts