Ad Widget

இந்திய கிரிக்கெட் வீரர் தங்கியிருந்த அறையில் ஒரு பெண் இரவு முழுவதும் தங்கியிருந்துள்ளார்!!

இந்திய விளையாட்டு வீரர் ஒருவர் தங்கிருந்த ஹோட்டல் அறைக்கு ஒரு பெண் சென்றுள்ளார். அவர் அங்கு, விடியும்வரை தங்கிருந்தார்’ என்று, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (04), வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது எஸ்.எம்.மரிக்கார் எம்.பி கேட்டிருந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2010ஆம் ஆண்டு ஜுலை மாதம் தம்புளையில் நடைபெற்ற இந்திய – இலங்கை கிரிக்கெட் போட்டியின் போது, ஜுலை 18ஆம் திகதி இரவு, இந்திய விளையாட்டு வீரர் ஒருவர் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு ஒரு பெண் சென்றுள்ளார் என்பதையும் அவர் அங்கு விடியும் வரையும் தங்கியிருந்தார் என்பதையும் அமைச்சர் அறிவாரா என்ற பிரதான கேள்வியுடன் கூடிய உப – கேள்விகள் பலவற்றைக் கேட்டிருந்தார்.

அக்கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் தயாசிறி ஜயசேகர,

‘இது தொடர்பாக அப்போதைய விளையாட்டு பாதுகாப்பு உத்தியோகத்தர் மேஜர் ஜெனரல் லோரன்ஸ் பெர்ணான்டோ, அப்போதைய இலங்கை கிரிக்கெட் சபைச் செயலாளருக்கு பிரதியொன்றுடன் கூடியதாக கடிதமொன்றை இந்திய கிரிக்கெட் குழுவின் முகாமையாளருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார். அக்கடிதத்தின் உள்ளடக்கத்தின் பிரகாரம், இலஞ்சம் வாங்கும் முயற்சியொன்று இடம்பெற்றுள்ளது’ என்றும் குறிப்பிட்டார்.

குறுக்கிட்ட எஸ்.எம்.மரிக்கார் எம்.பி, ‘இந்த விவகாரம், பயங்கரமானது. இலங்கை, போட்டியொன்றை ஏற்பாடு செய்து, அப்போட்டியில் விளையாடுவதற்கு வந்த குழுவின் வீரரொருவர் தங்கியிருந்த அறைக்குப் பெண்ணொருவர் சென்றுள்ளார். அவர் விடியும் வரையில் அங்கேயே இருந்துள்ளார்’ என்று சுட்டிக்காட்டினார்.

‘கதையொன்று இருக்கிறது. அந்தக் காலத்தில் ஐ.பி.எல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியவரே சுரேஸ் ரெய்னா, அவ்வணியின் உரிமையாளரான குருநாத் மெய்யப்பன் என்பவர், இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்தின் மருமகனாவார்.

அவருக்கு (மருமகனுக்கு) இந்தியாவில் சீமெந்து நிறுவனமொன்று இருக்கிறது. அந்த நிறுவனத்தின் இலங்கை முகவராகவே நிஷாந்த ரணதுங்க செயற்பட்டுள்ளார். (நிஷாந்த ரணதுங்க, இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் செயலாளர் ஆவார்). அவரே இந்த விசாரணைகளை மூடி மறைத்துவிட்டார்’ என்று சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் தயாசிறி ஜயசேகர, போட்டித் தொடரை ஏற்பாடு செய்த கூட்டங்கள் தொடர்பிலான அறிக்கையில், அவ்வாறான விவரங்கள் எவையுமே இல்லை என்றார்.

Related Posts