Ad Widget

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் அனில் கும்ளே திடீர் இராஜினாமா

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அனில் கும்ளே திடீர் இராஜினாமா செய்துள்ளார்.

கடந்த ஆண்டு 2016 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ளேவை இந்திய கிரிட்கெட் சபை நியமித்தது. இவர் ஓராண்டு காலம் பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டது. நேற்றுடன் கும்ப்ளேவின் பயிற்சியாளர் ஒப்பந்த காலம் நிறைவு பெற்றது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அனில் கும்ளே திடீர் இராஜினாமா செய்துள்ளார். இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுபயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் கும்ப்ளே இராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாம்பியன்ஸ் கிண்ண போட்டியின் போது கோலியுடன் கும்ளேவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டி வரை அனில் கும்ளே நீடிக்க இந்திய கிரிட்கெட் சபை கேட்டுக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானுக்கு எதிரான தோல்வியை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.புதிய பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts