Ad Widget

ஆஸ்திரேலிய அணி 85 ரன்னில் சுருண்டது

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

Australia v South Africa - 2nd Test: Day 1

இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டி தொடரில் பெர்த்தில் நடந்த முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 177 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி ஹோபர்ட்டில் இன்று தொடங்கியது.

‘டாஸ்’ வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டுபெலிசிஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

தென்ஆப்பிரிக்க வீரர்களின் அபாரமான பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலியா திணறியது . அந்த அணி 32.5 ஓவர்களில் 86 ரன்னில் சுருண்டது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் 3-வது குறைந்தபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்பு 47 ரன்னிலும், (2011 ஆண்டு), 75 ரன்னிலும் (1950) சுருண்டு இருந்தன.

ஆஸ்திரேலிய அணியில் இரண்டு வீரர்களே இரட்டை இலக்கத்தை தொட்டனர். கேப்டன் சுமித் அதிகபட்சமாக 48 ரன் (அவுட் இல்லை) எடுத்தார்.

பிலாண்டர் 21 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். அபோட் 3 விக்கெட்டும், ரபாடா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை விளையாடிவருகின்றது. தற்பொழுது தென் ஆப்பிரிக்க அணி 99 ஒட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts