Ad Widget

ஆஸிக்கு ஆறுதல் வெற்றி: 2-1 என தொடர் இலங்கை வசம்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 20க்கு இருபது, போட்டியில், 41 ஓட்டங்களால் இலங்கை அணி தோல்வியைத் தழுவியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது இருபதுக்கு 20 போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதற்கமைய, துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணிக்கு ஆரம்ப வீரர்களான அரோன் பின்ஜ் (53 ஓட்டங்கள்) மற்றும் மிச்சல் கிளிஞ்ஞர் (62 ஓட்டங்கள்) சிறந்த தொடக்கத்தை வழங்கினர்.

இதன்படி இருபது ஓவர்கள் நிறைவில் அந்த அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது.

எனவே, 188 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்கு இலங்கைக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதற்கமைய துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கைக்கு ஆரம்ப வீரரான டில்ஷான் முனவீர 37 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

நேற்றய போட்டில் இலங்கை சார்பாக வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்டம் இதுவாகும்.

இவர் தவிர்த்து மிலிந்த சிறிவர்த்த 35 ஓட்டங்களைப் பெற ஏனைய வீரர்கள் எவரும் அவ்வளவாக பிரகாசிக்கவில்லை.

இந்தநிலையில் 18 ஓவர்களுக்கு மட்டுமே தாக்குப் பிடித்த அந்த அணி 146 ஓட்டங்களை பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும், 3 போட்டிகள் கொண்ட 20க்கு இருபது தொடரில் முன்னதாக இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் இலங்கை வெற்றி பெற்றதோடு, தொடரையும் கைப்பற்றியிருந்தது.

இதற்கமைய, நேற்றய போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றமையால் வயிட்வோஸ் முறையை தவிர்த்து ஆறுதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

எனவே, 20க்கு இருபது தொடர் 2-1 என இலங்கை வசமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts