Ad Widget

ஆளுநர் கிண்ணத்துக்கான ஆங்கில விவாதப் போட்டி

வடமாகாண ஆளுநர் கிண்ணத்துக்கான ஆங்கில விவாதப் போட்டி நேற்று பி.ப 3மணியளவில் கோப்பாய் கல்வியற் கல்லூரியில் இடம்பெற்றது.

இந்த விவாதப் போட்டியில் இறுதி சுற்றுக்கு 16தொடக்கம் 17 வயதிற்குட்பட்டவர்கள் மேற்பிரிவு எனவும்
12தொடக்கம் 15 வயதிற்குட்பட்டவர்கள் கீழ்ப்பிரிவு எனவும் ஆறு பாடசாலைகள் இறுதியாக தேர்வு செய்யப்பட்டு போட்டிகள் நடைபெற்றன.

english-day

மேற்பிரிவிலிருந்து இறுதிச் சுற்றுக்கு வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலையும் சென்ஜோன்ஸ் கல்லூரியும் முதலில் போட்டியிட்டன.இதில் வேம்படி பெண்கள் உயர்தரப்பாடசாலை வெற்றியீட்டியது.

அதேபோல கீழ்ப்பிரிவில் இறுதிச் சுற்றுக்கு சுண்டுக்குளி மகளிர் பாடசாலையும்,யாழ் இந்துக்கல்லூரியும்
போட்டியிட்டன.இதில் சுண்டுக்குளி மகளிர் பாடசாலை வெற்றியீட்டியது.

மேலும் இந்நிகழ்வில் மேற்பிரிவில் முதல் மூன்று இடங்களையும் பெற்ற பாடசாலைக்கு பணப்பரிசகளும் வெற்றிக் கேடயத்தையும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி வழங்கி வைத்தார்.

இதில் முதலிடம் பெற்ற வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு 20000 ரூபாய் பணப்பரிசும் வெற்றிக் கிண்ணமும் வழங்கப்பட்டது. இரண்டாம் இடத்தை பெற்ற சென்ஜோன்ஸ் கல்லூரி 15000 ரூபாய் பணப்பரிசுகளையும்,மூன்றாம் இடத்தை பெற்ற சாவகச்சேரி இந்து கல்லூரி 10000 ரூபாய் பணப்பரிசுகளையும் பெற்றுக் கொண்டனர்.

மேலும் கீழ்ப்பிரிவில் முதல் இடத்தைப் பெற்ற சுண்டுக்குளி மகளிர் பாடசாலைக்கு 15000 ரூபாய் பணப்பரிசுகளும் வெற்றிக் கிண்ணமும் இரண்டாம் இடத்தை பெற்ற யாழ்.இந்துக்கல்லூரிக்கு 10000ரூபாய் பணப்பரிசுகளும்,மூன்றாம் இடத்தை பெற்ற வேம்படி பெண்கள் உயர்தரப்பாடசாலைக்கு 5000 ரூபாய் பணப்பரிசுகளும் வழங்கப்பட்டன.

Related Posts