ஆரியகுளம் சந்திப்பகுதியில் உள்ள நாகவிகாரையில் மேலும் ஒரு புத்தர்சிலை இன்றைய தினம் கண்டி அஸ்கிரிய பீடாதிபதி உதுஹம ரத்னபால சிறி புத்தராக்கித மகாநாயக்க தேரரால் திறந்து வைக்கப்பட்டது.
மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் கண்டி அஸ்கிரிய பீடத்தை சேர்ந்த உதுகம ரத்னபால சிறி புத்தராக்கித மகாநாயக்க தேரர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு இந்துமத குருமுதல்வரை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த கலந்துரையாடல் நல்லை ஆதீனத்தில் இன்று காலை 10 மணிக்கு இடம்பெற்றது.
இதன்போது வடமாகாணத்தில் பௌத்த மத்திற்கும் இந்துமதத்திற்கும் இடையில் உள்ள சமூககட்டமைப்புக்கள் மற்றும் ஒழுக்க விதிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
மேலும் மத ரீதியில் உள்ள பிரச்சிகைளை கண்டறிந்து அதற்கு தீர்வு காணவேண்டியது அவசியம் என்றும் இந்த சந்திப்பில் பேசப்பட்டது.
இதில் வடமாகாண பிரதம நாகவிகாராதிபதி ஞானரத்ன தேரரோ, யாழ் ஸ்ரீ நாகவிகாரையின் விகாராதிபதி சிறி விமலதேரோ, யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி உதயபெரேரா, வடமாகாண பிரதிப்பொஸிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, யாழ் மாவட்ட பிரதிப்பொஸிஸ் மா அதிபர் றொகான் டயஸ்,மற்றும் பௌத்தகுருமார்கள், இராணுவஉயர்அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து நாகவிகாரைக்குச் சென்று புத்தர் சிலை ஒன்றினையும் திறந்து வைத்து பிரித்ஓதி வழிபாட்டில் ஈடுபட்டார். மேலும் குருநகரில் உள்ள இராணுவ முகாம் ஒன்றிலும் புத்தர் சிலை ஒன்று திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.