Ad Widget

அளுத்கம, தர்ஹா நகரில் ஊரடங்கு சட்டம் அமுல்

jaffna-policeபொதுபல சேனா அமைப்பினரால் தர்ஹா நகரில் நடத்தப்படுகின்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலையடுத்தே பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டதையடுத்து நேற்று மாலை முதல் அளுத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது.

தர்ஹா நகரில் உள்ள பள்ளிவாசல் மற்றும் வீடுகள் மீது தாக்குதுல் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் தர்கா நகர் றிஸ்கி ஹாட்வெயாருக்கு தீ வைக்கப்பட்டள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பிரதேசத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் பௌத்த பிக்கு ஒருவரின் சாரதியை தாக்கியதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்து, நேற்றுமாலை பொதுபல சேனாவினர் எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை ஒழுங்கு செய்தனர்.

இதையடுத்து இரண்டு பிரிவு மக்களிடையில் பதற்ற நிலை ஏற்பட்டது. நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார் கண்ணீர் புகைபிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அத்துடன் ஊரடங்குச்சட்டமும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Posts