Ad Widget

அமைச்சர் எஸ்.பி. திசநாயக்க யாழ் பல்கலைக்கழகத்திற்கு விஜயம்

நேற்று யாழ் பல்கலைக்கழகத்திற்க்கு விஜயம் செய்த உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசநாயக்க அவர்கள், யாழ் பல்கலைக்கழக மாணவர்களிடம் அவர்களது குறைகள் பற்றி கேட்டறிந்ததோடு பல்கலைக்கழக நிர்வாகத்தினரிடமும் எதிர்காலத்தில் நிவர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகள் பற்றியும் ஆலோசனை செய்தார். மேலும் யாழ் பல்கலைக்கழகத்தினை உலகில் தலைசிறந்த பல்கலைக்கழகத்தில் ஒன்றாக மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

தமிழர்கள் கல்வியில் என்றும் தலைசிறந்தவர்கள். ஆனால் அவர்களை திசைதிருப்ப சிலர் முனைவதாகவும் குறிப்பிட்ட அவர் பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகள் குறித்தும் உரையாற்றிய போது பகிடிவதைகளில் ஈடுபடும் மாணவர்களை ஒருபோதும் மன்னிக்கப்போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் அவர்கள், பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதில் தற்போது கைகொள்ளப்பட்டு வரும் நடைமுறை வடக்கு,கிழக்கு மாணவர்களுக்கு நல்ல பலன் தருகின்றது. மேலும் தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பதனால் இலங்கை தேசிய பல்கலைக்கழகங்களின் சக்தியை அதிகரிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன், இலங்கைத் தமிழர்களும் சிங்களவர்களும் உறவினர்கள். எம் மொழிகள், மதங்கள் இந்தியாவில் தோன்றியவை. நாம் வந்தேறு குடிகள் அல்ல. எனவே நாம் தொடர்ந்தும் இந்த உறவை தொடர வேண்டும். என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

Related Posts