Ad Widget

அமெரிக்காவின் நடவடிக்கையால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படலாம்: கோத்தபாய

Koththapaya-rajaஅமெரிக்காவின் ஆசியா மீதான நாட்டமானது இலங்கையையும் பாதிக்கும் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக அமெரிக்கா ஆசிய பிராந்திய வலய நாடுகளின் மீது கூடுதல் நாட்டம் காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனும், மாலைதீவுடனும் அமெரிக்கா கூடுதல் உறவுகளைப் பேணி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார். அரேபிய புரட்சியைப் போன்று இலங்கையில் ஏற்பட வாய்ப்பு கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஜனநாயக ஆட்சி நிலவி வருவதாகவும், அரசியல் தலைமை மீது மக்கள் மிகுந்த மரியாதை கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குழப்பங்களை விளைவிப்போர் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

டியூனிசியா போன்ற நாடுகளில் பேஸ்புக் மற்றும் ஏனைய இணைய தளங்களை அடிப்படையாகக் கொண்டே புரட்சி வெடித்தது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts