Ad Widget

அபிவிருத்திக் குழு கூட்டம் அரசியல் கட்சிக ளின் சண்டைக்களமானது

யாழ்ப்பாணம் மற்றும் கிளி நொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட் டம் நேற்று அரசியல் கட்சிக ளின் சண்டைக்களமானது.யாழ். மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் கூட்டம் நீண்ட காலங்களின் பின்னர் யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று இடம் பெற்றது.அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் இணைத் தலைமையில் இந் தக் கூட்டம் இடம் பெற்றது. அதில் தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், ஈ.பி. டி.பியின் நாடாளுமன்ற உறுப் பினர்களான முருகேசு சந்திர குமார், சில்வஸ்திரி அலன் ரின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் யாழ். மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர்கள், யாழ்.மாவட்டப் பிரதேச செயலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.இதில், மாவட்ட அபி விருத்திக் குழுக் கூட்டத் துக்கு வருகை தராத நாடா ளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் பிரஸ்தாபித்துக் கொண்டிருக்கும் போதே கட்சிச் சண்டை மூண்டது.அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இது அவசரமாகக் கூட்டப்பட்ட கூட்டம். வழமை யாக அவகாசம் கொடுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் கள் எல்லோரும் வருவ தில்லை என்றார். அதற்குப் பதிலளித்த தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், “எல் லோரும் வரவேண்டும் என்று இல்லை” எனத் தெரிவித் தார். அத்துடன் “நான் கூட்ட மைப்பு சார்பாக வந்திருக் கின்றேன் தானே” என்றார்.

அதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா “நீங்கள் வந்தால் சரி. இருப்பினும் சகலரையும் பிரதிநிதித்து வப்படுத்தி நீங்கள் வந்திருப் பது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. உங்களுக்குள் பல கட்சிகள் இருக்கின்றன” என்று சிறீதரனைப் பார்த்துச் சொன்னார்.

உடனடியாக சிறீதரன், “அது வேறு விடயம். கட்சிக ளைப் பற்றிக் கதைக்க வேண்டாம். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றி மட்டும் கதையுங்கள்” என்றார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா “அதைப் பற்றித்தான் நான் கூறுகின்றேன்” என்றார்.”உங்களுக்குள்ளேயும் பல வேறுபாடுகள் இருக்கிறது” என்றார் சிறீதரன். உடனேயே அமைச்சர் தேவானந்தா “நீங்கள் மட்டும் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பிரதிநிதிப்படுத்த முடியாது தானே” என்றார்.
அதற்குப் பதிலளித்த சிறீதரன் “நான் அவ்வாறு கூறவில்லை. கிருஷ்ணாவுடன் சந்திப்பை நடத்த எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று விட்டார்கள்” என் றார்.

இதன்போது குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் “பின்னர் உங்களைக் கூட்டங்களுக்கு அழைக்கவில்லை என்று பத்திரிகைகளுக்கு சொல்லக் கூடாது” என்றார்.உடனேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் “நாங்கள் அப்படியொன்றும் சொல்வதில்லை. நீங்கள் எல்லோரும் கதைப்பதைப் பார்க்கும்போது என்னை விசாரணை செய்கின்ற மாதிரி இருக்கின்றது. அப் படியானால் நான் இந்தக் கூட்டத்தை விட்டு வெளி யேறுகின்றேன். எல்லோரும் திரும்பி வந்தபின் வருகிறேன்” என்றார்.

இதன்போது நாடாளு மன்ற உறுப்பினர் சந்திர குமார் மீண்டும் குறுக்கிட் டார். அதற்கு சிறிதரன் “நீங் கள் பேசாமல் இருங்கள். நான் தலைவருக்குப் பதில் சொல் கின்றேன். நீங்கள் இதில் தலை யிட வேண்டாம்” என்றார்.

“பேசுவதற்கு எனக்கு உரிமை இருக்கிறது” என் றார் சந்திரகுமார். “”நான் தலைவருக்குப் பதில் சொல் கின்றேன். நீங்கள் குறுக்கீடு செய்ய வேண்டாம்” என்று கடுந்தொனியில் தெரிவித் தார் சிறீதரன் எம்.பி.அரசைக் காப்பாற்றப் போராடிய அமைச்சரும் ஆளுநரும்
இந்திய வீட்டுத் திட்டம் தாமதமடைவது தொடர்பில் இலங்கை அரசே காரணம் என்று பல தவறான அபிப் பிராயங்கள் இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார். அதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய வீடமைப்புத் திட்டம் தாமதமடைவதற்கான கார ணத்தைக் கேட்டறிந்தார்.இதில் இந்திய ஒப்பந்த காரர்களால் இந்திய வீட்டுத் திட்டம் தாமதமடைவதாக பிரதேச செயலர்கள் தெரி வித்ததும், ஆளுநர் இந்திய வீடமைப்புத் திட்டம் தாமத மடைவதற்கு இலங்கை அரசு காரணமில்லை என்று தெரிவித்தார்.

Related Posts