Ad Widget

அதிபரை மண்டியிட வைத்த முதலமைச்சருக்கு மனித உரிமைகள் ஆணையகம் அழைப்பு!

பதுளை தமிழ் பெண் அதிபரை மண்டியிட வைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத்திற்கு மனித உரிமைகள் ஆணையகம் அழைப்பு விடுத்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி 2ஆம் திகதி ஊவா மாகாண முதலமைச்சரை மனித உரிமைகள் ஆணையத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாண முதலமைச்சர் தனக்கு வேண்டப்பட்டவர் ஒருவரின் புதல்விக்கு பதுளை பாடசாலையில் அனுமதி கோரி சிபாரிசு கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளார்.

எனினும் பாடசாலையின் அதிபர் அந்த சிபாரிசு கடிதத்தினை நிராகரித்துள்ளதோடு, பாடசாலை அனுமதியினையும் மறுத்து தான் கல்வி அமைச்சிக்கு கட்டுப்பட்டே பணியாற்றுவதாகவும், அரசியல்வாதிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய பணியாற்றவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை அறிந்த முதலமைச்சர், சம்பந்தப்பட்ட அதிபரை தன் வீட்டுக்கு அழைத்துவந்து அவரை தன்முன் பலவந்தமாக மண்டியிட்டு மன்னிப்பு கோரவைத்துள்ளார். இந்த விவகாரம் பாரிய சர்ச்சையை தோற்றுவித்ததையடுத்து அவர் பதவிவிலகினார்.

Related Posts