Ad Widget

அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை உட்கட்டுமாண பணிகளை விரைவில் நிறைவுசெய்ய வலியுறுத்தல்

அச்சுவேலி கைத்தொழிற் பேட்டையின் உட்கட்டுமாணப் பணிகளை அடுத்த மாத இறுதிக்குள் நிறைவு செய்வதற்கான நடவடிக்கையினை துரிதப்படுத்துமாறு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, துறைசார்ந்தவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

d-3

அச்சுவேலியில் அமைக்கப்பட்டு வரும் கைத்தொழிற்பேட்டையின் உட்கட்டுமாணப் பணிகளினைப் பார்வையிடுவதற்காக இன்று பார்வையிடச் சென்ற சமயமே அமைச்சர் இந்தப் பணிப்புரையினை விடுத்துள்ளார்.

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் கீழ், இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களின் நிதியுதவியுடன் இந்தக் கைத்தொழிற்பேட்டை அமைக்கப்பட்டு வருகின்றது.

65 ஏக்கர் கொண்ட அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையில் முதற்கட்டமாக 25 ஏக்கருக்கான கட்டுமாணப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கைத்தொழிற் பேட்டையின் உள்ளக வீதிகள், வெள்ளநீர் வாய்க்கால்கள், வாகனத்தரிப்பிடம், தீயணைப்பு பிரிவு, மற்றும் மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அமைச்சர் பார்வையிட்டார்.

அத்துடன், தொழிற்பேட்டைக்கு தேவையான நீர்வசதி, மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் அமைச்சர் துறைசார்ந்தவர்களுடன் கேட்டறிந்துகொண்டார்.

இதன்போது கைத்தொழில் அபிவிருத்தி சபையின் உதவிப் பணிப்பாளர் சிவகெங்காதரன் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் உடனிருந்தனர்.

df

இதே வேளை அச்சுவேலி பகுதி விவசாயிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், விவசாயத்த்துறையை மேம்படுத்தும் பொருட்டு முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்தறிந்து கொண்டார்.

இதன்போது, விவசாயத்தை மேம்படுத்துவது தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்தினார்.

இதன்பிரகாரம், விவசாயிகளுக்கு வங்கிகள் ஊடாக இலகு கடன்களை பெற்றுக் கொடுப்பது, உற்பத்திகளுக்கான சந்தைவாய்ப்பினை பெற்றுக் கொடுப்பது உள்ளிட்ட விவசாயிகளின் நலன்சார்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts