Ad Widget

அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டார்!

Asathsaliகொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி விடுதலை செய்யப்டப்பட்டுள்ளார்.

புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்த அசாத் சாலி, ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அசாத் சாலியின் தடுப்புக்காவல் உத்தரவினை ரத்து செய்யுமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அசாத் சாலி ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

குற்றத்தை ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்து அசாத் சாலி ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விடுதலை செய்யப்பட்ட அவர் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மகளான அமீனா சாலி உள்ளூர் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அசாத் சாலி கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அசாத் சாலியின் விடுதலையை வலியுறுத்தி யாழில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

அசாத் சாலி குற்றத்தை ஒப்புக்கொண்டார்? கைது குறித்து அரசியல்வாதிகள் புரிந்து கொள்ளவில்லை!- கோத்தபாய

Related Posts