Ad Widget

அக்கரை கிராமம் இராணுவத்தால் விடுவிப்பு

37யாழ். மாவட்டத்தில் இராணுவம் நிலைகொண்டிருந்த வளலாய், அக்கரை கிராமம் இன்று பொது மக்களின் மீள்குடியேற்றத்திற்காக இராணுவத்தால் விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை இந்த கிராமத்தை பொதுமக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. 1986ஆம் ஆண்டு இக்கிராமத்தில் வாழ்ந்த மக்கள் யுத்தம் காரணமாக பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து வசித்து வருகின்றனர்.

இதுவரை காலமும் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த இந்த கிராமத்தில் மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு படையினர் இன்று உத்தியோகபூர்வமாக வழங்கியுள்ளனர்.

இதில் முதற்கட்டமாக இக்கிராமத்தில் வாழ்ந்த 38 குடும்பங்கை மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அம்மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் பிரதேச செயலாளர் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய இந்த நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், யாழ் மாவட்ட உதிவிச் செயலர் சுதர்சன், கோப்பாய் பிரதேச செயலர் பிரதீபன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், இராணுவ உயரதிகாரிகள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts