வைத்தியசாலையில் திருடிய பெண் கைது

சாவகச்சேரி வைத்தியசாலையில் ஆணொருவரின் கைப்பையை அபகரித்துச் சென்ற பெண்ணொருவரை இன்று திங்கட்கிழமை (25) காலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாவகச்சேரி வைத்தியசாலையிலுள்ள தனது தந்தையாரைப் பார்ப்பதற்கான தனது மகளுடன் திங்கட்கிழமை (25) காலை சென்ற மேற்படி பெண், வைத்தியசாலை உணவகத்திற்குச் சென்று அங்கு மேசையில் வைக்கப்பட்டிருந்த கைப்பையைத் திருடி தனது பையினுள் வைத்துள்ளார்.

மேசையில் பையை வைத்தவர் அதனைக் காணாது தேடிய போது, பெண்ணொருவர் கைப்பையைத் திருடிச் செல்வதாக உணவக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, மேற்படி பெண்ணின் பின்னால் சென்ற கைப்பையைப் பறிகொடுத்தவர், வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களின் உதவியுடன் பெண்ணை மடக்கிப் பிடித்தார்.

தொடர்ந்து, மேற்படி பெண்ணும் அவரது 11 வயது மகளும் வைத்தியசாலைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேற்படி இருவரும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor