வேலணையில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

dead-footவேலணை 06ம் வட்டாரப் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.அதேயிடத்தைச் சேர்ந்த செல்வராசா அசந்தன் (வயது-29) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

இன்று காலை 10.30 மணியளவில் வேலணை இலந்தைக்காட்டுப் பிள்ளையார் ஆலயத்தில் வேலை செய்து கொண்டிருந்த போதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் அண்மையில் கட்டார் நாட்டிலிருந்து ஊருக்குத் திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்