வேட்பாளரைத் தேடிய தேர்தல் திணைக்கள அதிகாரிகள்

A03(3)இராணுவத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பொது மக்களுக்கான உதவிகள் வழங்கும் நிகழ்வில், எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கலந்துகொண்டுள்ளார் என்று கிடைத்த இரகசிய தகவலொன்றை அடுத்து தேர்தல் திணைக்கள அதிகாரிகள் மேற்படி நிகழ்வை முற்றுகையிட்டுள்ளனர்.

இச்சம்பம் நேற்று திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ், நாவந்துறைப் பகுதியில் இராணுவத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேறே வேட்பாளர் ஒருவர் கலந்துகொண்டிருந்தார்.

இது தொடர் தகவல் அறிந்த தேர்தல் திணைக்கள அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு வந்து நிலமைகளை ஆராய்ந்துள்ளதுடன் குறித்த பகுதியில் ஒட்டப்பட்டுள்ள தேர்தல் சுவரொட்டிகள், கொடிகள் என்பவற்றை அகற்றுமாறு பணிப்புரை விடுத்தனர்.

இதனை அடுத்த சில மணி நேரம் தேர்தல் திணைக்கள அதிகாரிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றது.

நீண்டகாலமாக மக்கள் நலத்திட்ட வேலைத்திட்டங்களை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த நான்கு மாதங்களுக்கு மேல் திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்வே இது. தவிர இது பிரசார நடவடிக்கை இல்லை என்று இராணுவத்தினர் இதன்போது தெரிவித்தனர்.

மேற்கொண்டு இதனைக்குழப்பும் வகையில் செயற்பாடாது இந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் தேர்தல் திணைக்கள அதிகாரிகளிடம் இராணுவத்தினர் கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து நிலைமையை ஆராய்ந்த அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறினர்.

தொடர்புடைய செய்தி

நாவாந்துறையில் கட்டுமானப் பொருட்கள் வழங்கிவைப்பு