வெள்ளை வானில் வந்தவர்களால் ஒருவர் கடத்தல்!, வன்னியில் தொடருகின்றது பதற்றம்

kidnap-100x80புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து வெள்ளை வானில் வந்த நபர்களினால் இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

உடையார்கட்டு தெற்கு, உடையார் கட்டு பகுதியில் வசித்து வரும் இளைஞனே இன்று மதியம் 12.30 மணியளவில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும்,குறித்த இளைஞர் புதுக்குடியிருப்பு பகுதியில் இயங்கிவரும் வெதுப்பகம் ஒன்றில் வேலை செய்துவருவதுடன் இவர் ஒரு மாற்றுத்திறனாளி என்பதுடன் முன்னாள் போராளி எனவும் பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related Posts