Ad Widget

வெள்ளைப் பிரம்பு தின முதலாவது கொடி ஜனாதிபதிக்கு அணிவிப்பு

சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கொடி விற்பனை வாரத்தை முன்னிட்டு முதலாவது கொடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து அணிவிக்கப்பட்டது.

day

இலங்கை பார்வை ரீதியாக அங்கவீனமுற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் சுகத் வசந்த சில்வாவினால் ஜனாதிபதிக்கு முதலாவது கொடி அணிவிக்கப்பட்டது.

கண்பார்வையற்றவர்கள் பொதுவாக முகங்கொடுக்கும் சில பிரச்சினைகள் குறித்தும், அநீதிகள் குறித்தும் அச்சங்கத்தின் தலைவர் சுகத் வசந்த சில்வா ஜனாதிபதிக்கு விளக்கமளித்தார்.

கண்பார்வையற்ற மற்றும் வலுவிழந்தவர்களின் பிரச்சினைகள் குறித்த ஓர் அறிக்கையை இச்சந்தர்ப்பத்தின்போது அச்சங்கத்தின் செயலாளர் நுவன் இந்திக்கவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. வெள்ளைப் பிரம்பு தினத்தைக் குறிக்கும் முகமாக அச்சங்கத்தின் செயலாளர் நுவன் இந்திக்கவுக்கு ஒரு வெள்ளைப் பிரம்பையும் பொருளாளர் பி.டி.நிஹாலுக்கு அந்நிதியத்திற்கான பண உதவியையும் ஜனாதிபதி வழங்கிவைத்தார்.

இலங்கை பார்வை ரீதியாக அங்கவீனமுற்ற பட்டதாரிகள் சங்கத்தின் கல்வி மற்றும் நலநோம்புகை சேவைகளுக்காக நிதி திரட்டும் வகையில் இம்மாதம் 15ஆம் திகதி முதல் 22ஆம் திகதிவரை கொடி விற்பனை வாரம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்று இலங்கை பார்வை ரீதியாக அங்கவீனமுற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related Posts