வெள்ளவத்தை விபத்தில் இரு பெண்கள் மரணம்

சுவிஸிலிருந்து விடுமுறைக்காக இலங்கைக்குச் சென்றவர்களுள் ஒரு சிறுமி உட்பட இன்னொருவரும் வீதி விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

accidentசுவிஸ் சூரிச் இல் வசிக்கும் கரம்பனைச் சேர்ந்த பசுபதி ஜீவன், புங்குடுதீவை சேர்ந்த ஜெயந்திமாலா தம்பதியினர் தம் பிள்ளைகளோடு இலங்கைக்கு வந்திருந்தனர்.

தம் விடுமுறையை கழித்துவிட்டு சுவிஸ் நாட்டுக்கு மீண்டும் திரும்ப இருந்தவேளையிலேயே இக் கோர விபத்து நடைபெற்றுள்ளது.

இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பு வெள்ளவத்தை பகுதி வீதியில் பாதசாரிக் கடவையில் வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில், கார் ஒன்று மோதியதில் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் சுவிஸில் இருந்து இலங்கைக்கு வந்த ஜீவன் ஜெயந்திமாலா தம்பதிகளின் மகள் ஜனனி(16) உயிரிழந்ததுடன், ஜீவனின் சகோதரியின் மகள் (பாலசூரியன் வாரணி (29) படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதோடு, மேலும் படுகாயமடைந்த ஜீவனின் மகன் ஜனன் (13) கொழும்பு வைத்தியசாலையில் தீவிர சிகிசைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசாரணைகளின் போது காரை ஓட்டி வந்த சாரதி மதுபோதையில் இருந்ததனால் இக் கோர விபத்து நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.