வெலிவேரியவில் இடம்பெற்ற சம்வம் விரைவில் எமக்கும் :: எம்.ஏ.சுமத்திரன் தெரிவிப்பு

Sumanthiran MPஅரசிற்கு ஏதிராக நடவடிக்கையில் ஈடுபட்டால் வெலிவேரியவில் இடம்பெற்றது போன்றே எமக்கும் இடம்பெறும்.இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமத்திரன்

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமத்திரன் மேலும் தெரிவிக்கையில்

குடிநீர் கேட்டுப் போராடிய அப்பாவிப் பொதுமக்களுக்கு அரசாங்கம் துப்பாக்கி முனையால் பதில் கொடுத்துள்ளது. ஆர்ப்பாட்டத்தை கலைக்க உயிர்களை காவுகொள்வதற்கான எவ்வித அவசியமும் இல்லை. இனி நாட்டில் இவ்வாறாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு துப்பாக்கி முனைதான் பதில் கூறும் என்று எமது அரசு சொல்லாமல் சொல்லிவிட்டது.
இங்கு நாம் ஒன்றை சரியாக புரிந்து கொண்டு விட்டோம்.

எவரும் அரசுக்கு எதிராக கிளர்ந்தெழ முடியாது. அவ்வாறு எவரும் செயற்பட்டால் அவர்களுக்கு வெலிவேரியவில் இடம்பெற்றது போன்ற ஒரு பரிசுதான் கிடைக்கப்போகிறது.

இது வரை காலமும் தழிழ்,முஸ்ஸிம் மக்களுக்கு மட்டுமே வால் காட்டிய அரசு இப்போது சிங்க மக்களிற்கும் வால் காட்டிவிட்டது என்பது தான் கேலிக்கையான விடையமாக உள்ளது.

மேலும் குறித்த சம்பவத்தில் எத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்ற சரியான தகவலை அரசு வெளியிடவில்லை.இது எமது நாடட்டிற்கு உலக நாடுகள் மத்தியில் அவப்பெயரை உண்டாக்கி விட்டது.இதற்கான சரியான தீர்வு என்றால் உடனடியான சர்வதேச விசாரனை நடாத்தப்பட வேண்டும்.இதையே எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன.அவ்வாறு தெரிவித்தார் எம். ஏ. சுமந்திரன்