வலி.கிழக்குப் பிரதேசத்தில் மக்கள் குடியிருக்காத வெற்றுக் காணிகளை அதன் உரிமையாளர்கள் உடனடியாகத் துப்புரவு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோப்பாய் பிரதேச செயலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பிரதேச செயலர் ம.பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு தொடர்பான கூட்டத்தில் பொது அமைப்புக்களாலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டது.
இவ்வாறு துப்புரவு செய்யப்படாது பற்றைகளால் மூடியிருக்கும் காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிரான வலி.கிழக்கு பிரதேச சபை சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது.
எனவே மக்கள் குடியிருக்காத சகல வெறும் காணிகளும் உடனடியாக துப்புரவு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அறிவுறுத்தல் பிரசுரங்களை சபை விரைவில் சம்பந்தப்பட்ட காணிகளுக்கு முன்பாக ஒட்டவுள்ளது.
புல் பற்றைகளில் இருந்து பெருகும் நுளம்புகளால் குடியிருப்பாளர்களுக்கு தொற்றுநோய் அபாயம் ஏற்படும் சூழல் நிலவுகிறது. நுளம்புத் தொல்லையால் டெங்கின் தாக்கமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் சுகாதார பகுதியினர் தெரிவித்தனர்.