வெட்டுக் காயங்களுடன் மூதாட்டியின் சடலம் மீட்பு

யாழ் – இளவாலை – பத்மாவத்தை பகுதியில் 75 வயது மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 07.00 மணி அளவில் அயல் வீட்டார் வழங்கிய தகவலின் படி இளவாளை பொலிஸார் குறித்த சடலத்தைக் கண்டெடுத்துள்ளனர்.

பலியானவர் இராஜநாயகம் இராஜேஸ்வரி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர் குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

இதேவேளை சடலத்தில் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாக கூறிய பொலிஸார், கொள்ளையடிக்க வந்தவர்கள் இவரைக் கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சடலம் நீதவான் விசாரணைகளுக்காக தற்போது அவ்விடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது.