வீதியில் சமாந்தரமாக சென்ற மாணவர்கள் நீதிமன்றுக்கு அழைப்பு

judgement_court_pinaiவீதியில் சமாந்தரமாக சைக்கிள்களில் சென்ற மாணவர்கள் ஐவரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல கல்லூரியொன்றில் உயர் தரத்தில் கல்விப்பயிலும் மாணவர்கள் 5 பேருக்கே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்தார்.

யாழ். ஆஸ்பத்திரி வீதியில் சைக்கிள்களில் சமாந்தரமாக பயணித்துக் கொண்டிருந்த வேளை, யாழ். நீதிமன்ற நீதிவான் அவ்வழியாக காரில் வந்துள்ளார். அவர் பயணித்த காருக்கு இடம்கொடுக்காது மாணவர்கள் ஐவரும் வீதியில் சைக்கிள்களில் சமாந்தரமாக பயணித்துகொண்டிருந்துள்ளனர்.

குறித்த மாணவர்கள் 5 பேரும் போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்தாக நீதிபதியினால் யாழ். பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலின் பிரகாரம் 5 மாணவர்களும் யாழ். போக்குவரத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு யாழ். பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதுடன் எதிர்வரும் 23 ஆம் திகதி யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அத்துடன், வீதிகளில் சமாந்தரமாக பயணிப்பதை பாடசாலை மாணவர்கள் தவிர்த்துக் கொள்ளுமாறும், அவ்வாறு தவிர்க்கும் படசத்தில் வீதி விபத்துக்களை குறைப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்றும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

Recommended For You

About the Author: Editor