வீடுகள் காணிகள் கையளிப்பை இடை நிறுத்தியது தமிழ் தேசிய கூட்டமைப்பே!- தி.துவரகேஸ்வரன்

Thuvarakeswaranகடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ் வந்திருந்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறி இருந்தார் “தேர்தல் ஆணையாளரின் வேண்டுகோளுக்கு இணங்க வீடுகள் காணிகள் கையளிப்பை இடை நிறுத்தி உள்ளதாக” தேர்தல் ஆணையாளருக்கு முறைப்பாடு செய்து இந்த வைபவத்தை இடை நிறுத்தியது தமிழ் தேசிய கூட்டமைப்பே! இதனால் சுமார் 400 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன என ஐக்கிய தேசிய யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் தி.துவரகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று மாலை 2.30 மணியளவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நடைபெறவுள்ள வடக்கு மாகாண சபை தேர்தல் நீதியாகவும் நேர்மையாகவும் நடக்கும் என்ற நம்பிக்கை எமக்கில்லை.

இம்முறை யாழ் மத்திய கல்லூரியிலையே வாக்கெண்ணும் நிலையம் அமைக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது அவ்வாறு அங்கு அமைக்கப்படுமேயானால் எமது கட்சி சார்பாக முகவர்களை வாக்களிப்பு நிலையங்களுக்கோ வாக்கெண்ணும் நிலையத்திற்கோ அனுப்ப போவதில்லை.

மத்திய கல்லூரிக்கு அருகாமையில் பொலிஸ் நிலையம் அமைந்துள்ளது. அத்துடன் அப் பிரதேசம் இராணுவ பிரசன்னம் அதிகமான பிரதேசம். எனவே எமது முகவர்கள் அச்சுறுத்தல்களுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாகும் நிலை உருவாகலாம்.

அதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ் வந்திருந்த பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறி இருந்தார். தேர்தல் ஆணையாளரின் வேண்டுகோளுக்கு இணங்க வீடுகள் காணிகள் கையளிப்பை இடை நிறுத்தி உள்ளதாக தேர்தல் ஆணையாளருக்கு முறைப்பாடு செய்து இந்த வைபவத்தை இடை நிறுத்தியது தமிழ் தேசிய கூட்டமைப்பே.

இதனால் சுமார் 400 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன இவர்கள் தடுத்து இருக்க விட்டால் சில தினங்களில் யாழ் வரவுள்ள ஜனாதிபதியால் அக்காணிகள் வீடுகள் அதன் உரிமையாளரிடம் கையளிக்கபட்டு இருக்கும்.

இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தோல்வி அடைந்தால் அக் காணி கையளிப்பு நிகழ்வுகள் நிறுத்தப்படலாம் எனவே அவர்கள் தற்போது கையளிப்பதை இடைநிறுத்தி இருக்க கூடாது.

மக்களின் காணிகளை அவர்களிடம் கையளிப்பதை தமது அரிசியல் நோக்கத்திற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு தடுத்து நிறுத்தி உள்ளது.

அன்று சீனி கொண்டு போனால் புலிக்கு கொண்டு போறான் சவர்க்காரம் கொண்டு போனால் புலிக்கு கொண்டு போறான் மொழுகு திரி கொண்டு போனால் புலிக்கு கொண்டு போறான் என்று கூறியவர்களே இன்று தமிழ் தேசியம் பேசிக்கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பில் நின்று மக்களிடம் வாக்கு கேட்கின்றனர் என மேலும் தெரிவித்தார்.