விழிப்புலனற்ற மாணவன் மரதன் ஓடி சாதனை

M02(81)தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியை முன்னிட்டு நடத்தப்பட்ட மரதன் ஓட்டப்போட்டியில், விழிப்புலனற்ற மாணவன் ஒருவர் 8 கிலோ மீற்றர் தூரத்தை ஓடி சாதனை படைத்துள்ளார்.

இந்தப் போட்டியில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் உயர்தரம் கற்றுவரும் விஜயகுமார் விஜயலாதன் என்ற மாணவனே இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.

இன்று காலை 6 மணிக்கு சுன்னாகம் மருதனார்மடத்தில் இருந்து தெல்லிப்பழை வரையான 8 கிலோ மீற்றர் தூரத்தை இவர் எந்தவித தடையும் இன்றி தனது கண்களை கறுப்பு துணியால் கட்டியவாறு ஓடி முடித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு வன்னியில் நடைபெற்ற யுத்தத்தினால் தனது பார்வையை இழந்த இந்த மாணவன், சுன்னாகம் வாழ்வகத்தில் கல்விகற்று வருகிறார்.

இவர் அந்தப்போட்டியில் பெருவிருப்போடு பங்குபற்றி ஏனைய மாணவர்களுக்கு தான் சளைத்தவன் இல்லை என்ற வகையில் இவர் தனது சாதனையினை நிலைநாட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor