அமைச்சர் டக்ளஸ் விலங்கு பாதுகாப்பு செயற்திட்டத்தை பார்வையிட்டார்

யாழ்.மாநகர சபையுடன் இணைந்து ஒடெல் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் யாழ்ப்பாண விலங்கு பாதுகாப்பு செயற்திட்டத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் பார்வையிட்டுள்ளார்.

DSC_01152

யாழ்ப்பாண பொதுநூலகத்திற்கு அருகாமையில் இன்றைய தினம் (26) இடம்பெற்ற இச் செயற்திட்டத்தை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்.

சமூகத்தில் கட்டாக்காலி நாய்களினால் பொதுமக்கள் எதிர்நோக்கி வரும் இடர்பாடுகளுக்கு தீர்வு காணும் முகமாக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்மூலம் கட்டாக்காலி நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதுடன் அவற்றினால் மக்களுக்கு ஏற்படக் கூடிய நோய் உள்ளிட்ட ஏனைய தீங்குகளிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இதற்கென ஒடெல் நிறுவனம் 12.5 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.

இத்திட்டத்தை யாழ்.மாநகரசபையின் பொதுச் சுகாதார பரிசோதகர்களும், ஒடெல் நிறுவனப் பிரதிநிதிகளும் முன்னெடுத்து வருகின்றனர்.

இதன்போது நிறுவனத்தின் இணைப்பாளர் டி.சில்வா ஆகியோர் உடனிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor