Ad Widget

வியட்நாமுடன் இணைந்து முன்னோக்கி வரும் மனோநிலை இலங்கைக்கு இல்லை !

இலங்கை அரசுக்கு வியட்நாம் அரசுடன் இணைந்து அபிவிருத்தியில் முன்னோக்கி வருவதற்கான மனோநிலை இல்லை என, இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் பஹன் கியு து (phan kieu thu ) குற்றஞ்சாட்டியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

cv-viyadnam

யாழிற்கு விஜயம் மேற்கொண்ட வியட்நாம் தூதுவர் வடமாகாண முதலமைச்சரை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அத்துடன், இது வடமாகாணத்திற்கான முதலாவது பயணம், அரசியல் காரணங்களுக்காக இங்கு வர முடியாமல் போய்விட்டதென்றும், இங்கு வந்தால் பிரச்சினைகள் ஏற்படுமென்று தமக்கு கூறப்பட்டதாகவும் இவ்வளவு காலத்தின் பின்னர் வரக் கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளதென்றும் அவர் கூறியதாக வடமாகாண முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வின்னேஸ்வரன் இது குறித்து தொடர்ந்தும் கூறியதாவது,

உலகில் மிக வலுவான நாடான அமெரிக்காவுடன், போராடி அமெரிக்காவை தோற்கடித்த நாட்டில் இருந்து, பல விடயங்களை அறிந்து கொள்ள வேண்டி இருக்கின்றது. அவ்வாறான போருக்குப் பின்னர், எவ்வாறு தம்மைப் புனருத்தாபனம் செய்து முன்னுக்குவந்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் பேசினோம்.

வியட்நாம் நாட்டினைப் பொறுத்தவரையில், விவசாயம் மற்றும் மீன்பிடி, கைத்தொழில்களில் முன்னேற்றம் அடைந்துள்ளார்கள்.

அந்த விதத்தில், பல விதமான நிபுணத்துவ ஆலோசனைகளை தர முடியும் என்றும் அவர் கூறினார்.

Related Posts