யாழ்.வேம்படி வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ்.வேம்படி வீதியூடாக பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற முச்சக்கரவண்டியும் 3 ஆம் குறுக்குத் தெருவில் இருந்து வந்த வானும் மோதிகொண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் ஒரு முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தின்போது முச்சக்கரவண்டி முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 15 மீற்றருக்கு அப்பால் தூக்கி வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்துச் சம்பவம் குறித்து யாழ்.போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.