விபத்தில் கல்வியியற் கல்லூரி மாணவர்கள் இருவர் காயம்

கோப்பாய் இராஜபாதை வீதிச் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை 3.00 மணியளவில் நடைபெற்ற விபத்தில் கோப்பாய் கல்வியியற் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் காயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கல்வியியற் கல்லூரியிலிருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவிகள் இராஜபாதை வீதிச் சந்தியைக் கடக்க முற்பட்டபோது இருபாலையிலிருந்து வந்த டிராக்டருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.