யாழ்.மாவட்ட பிரதேச செயலகங்களில் இயங்கும் விதாதா வள நிலையம் ஊடாக இலவச தொழிற்பயிற்சி வழங்கப்படவுள்ளன.
இத்திட்டத்தின் மூலம் இளைஞர், யுவதிகள் தமது சுய தொழில்களை முன்னேற்றவும், புதிய சுயதொழில் முயற்சியை மேற்கொள்வதற்கும் ஏற்ற வகையில் இப்பயிற்சி அமையும் என யாழ்.பிரதேச செயலர் திருமதி சு.தெய்வேந்திரம் தெரிவித்தார்.
மேற்படி இந்த தொழில் பயிற்சி எதிர்வரும் மாதம் ஏப்ரல் 10ம் திகதிக்கு முன்னர் தமது பிரதேச செயலகங்களில் இயங்கும் விதாதா வள நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த தொழில் பயிற்சியில் கணினி வன்பொருள், இணைய வடிவமைப்பு, ஊதுபத்தி, மெழுகுதிரி, சவர்க்காரங்கள் வடிவமைப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கள் அறிமுகம் போன்ற பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.