விடுதலைப்புலிகளை திருப்திப்படுத்தும் விதத்தில் கமரூன் செயற்படுகிறார்: கோத்தபாய குற்றச்சாட்டு

விடுதலைப்புலிகளை திருப்திபடுத்தும் முகமாகவே பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் கொழும்பில் செயற்பட்டதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கமரூனின் செயற்பாடு, பிரித்தானியாவில் உள்ள உலக தமிழர் பேரவை மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை ஆகியவற்றின் பின்னணியில் இடம்பெற்றதாக கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்காக இலங்கை வருவதற்கு முன்னர் பிரித்தானிய பிரதமரின் குழுவினரை, பிரித்தானிய தமிழ் குழுக்கள் சந்தித்தமையையும் கோத்தபாய சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரித்தானியாவில் கொன்சவேட்டிவ் மற்றும் ஜனநாயக்கட்சியின் தேர்தல் வெற்றியை கருத்திற்கொண்டு செயற்படுகின்றனர். இதன் ஒரு செயற்பாடே இலங்கையிலும் இடம்பெற்றிருக்கிறது என்றும் கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.

போர்க்குற்றம் தொடர்பில் கமரூனின் எச்சரிக்கை, இலங்கை இன்னும் பிரித்தானிய ஆளுகைக்குள் இருப்பதை போன்ற நிலைமையில் விடுக்கப்பட்டுள்ளதாகவும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.