விஞ்ஞான மற்றும் மருத்துவ பீட மாணவர்கள் விடுதலை

பயங்கரவாத குற்றத் தடுப்பு பொலீசாரினால் கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மருத்துவ மற்றும் விஞ்ஞான பீட மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ பீட பீடாதிபதி பாலகுமாரன் தெரிவித்தார்.

நேற்று இரவு மருத்துவ பீட மாணவர்கள் ஐவரும் விஞ்ஞான பீட மாணவர்கள் இருவருமே விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும் முகாமைத்துவ பீடம் மற்றும் கலைப்பீடம் ஆகிய மாணவர்கள் விடுதலை தொடர்பாக இன்றைய தினம் துணைவேந்தருக்கும் பயங்கரவாத குற்றத்தடுப்பு அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்தை ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.