Ad Widget

விக்னேஸ்வரன் மக்கள் மத்தியில் குழப்பமான சிந்தனையை தோற்றுவித்தார் – சுமந்திரன்

மக்களால் நிராகரிக்கப்பட்ட தீர்வு திட்டங்களை, மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள், தேர்தலில் மக்கள் ஆதரவை பெற முடியாதவர்கள் பின்கதவு வழியாக இப்படியான ஒரு பேரவை மூலமாக கொண்டுவர முனைவது ஜனநாயக விரோத செயலாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நாங்கள் தொடர்ச்சியாக ஒரு நிலையான அரசியல் நிலைப்பாட்டை முன்வைத்து மக்கள் ஆணையைப் பெற்றுள்ளளோம்.

கடந்த ஐந்து ஆறு வருடங்களாக நாம் மக்கள் ஆணையைப் பெற்றுள்ளளோம்.

அதற்கு மாற்றமான வித்தியாசமாக முன்வைக்கப்பட்ட தீர்வுகளை மக்கள் நிராகரித்திருக்கின்றார்கள்.

அவ்வாறு முன் வைத்தவர்களையும் மக்கள் நிராகரித்திருக்கின்றார்கள்.

ஆகவே எந்த ஒரு அமைப்பு உருவானாலும் அது குறித்து மக்கள் அச்சம் அடைய தேவையில்லை.

மக்களிடம் ஆணை பெற வேண்டும். தீர்வு திட்டங்களை மக்களின் முன் வைக்க வேண்டும்.

கடந்த தேர்தலில் கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்திற்கு தான் மக்கள் ஆணை வழங்கி இருக்கின்றார்கள்.

ஆனால் அந்த தேர்தலின் போது வடமாகாண முதலமைச்சர் ஆதரவு வழங்கவில்லை.

அவர் குறைந்தளவு மக்கள் மனதில் குழப்பமான சிந்தனையையே கொண்டு சென்றார்.

என்றாலும் மக்கள் சிந்தித்து நிதானமாக எமக்கு வாக்களித்திருக்கின்றார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts