வாக்காளர் பதிவுத்திகதி 9ம் திகதி வரை நீடிப்பு; தேர்தல் திணைக்களம்

mahinda-deshpriyaவடக்கு கிழக்கில் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட காலம் எதிர்வரும் 9ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

போர் நடைபெற்ற காலத்தில் பல்வேறு காரணங்களால் வடக்கு, கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்து வேறு பிரதேசங்களில் வசிப்பவர்களில், இதுவரை தம்மை வாக்காளர்களாக பதிவுசெய்து கொள்ளாதவர்கள் வாக்காளர்களாக பதிவுசெய்து கொள்வதற்கான காலஅவகாசம் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கடந்த யுத்தகாலங்களில் வடக்கு, கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள், 2012 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய தவறியவர்கள், தம்மை பதிவுசெய்வதற்காக வழங்கப்பட்ட காலஅவகாசம் கடந்த மாதம் 28 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.

எனினும் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை அடுத்து, காலஅவகாசம் ஜூலை 02 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது. மேலும் குறித்த காலஅவகாசம் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் விடுத்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.