குருநாகல் பொதுஹர ரயில் விபத்தினைத் தொடந்து நிறுத்தப்பட்டுள்ள ரயில் சேவைகள் இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி மஹவ, குருநாகல் மற்றும் பொல்கஹவெல ரயில் நிலையங்களில் இருந்து மூன்று அலுவலக ரயில்கள் பயணத்தை ஆரம்பித்ததாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த அலுவலக ரயில் சேவைகள் தற்காலிகமாக இரண்டாம் மார்க்கத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிடுகின்றது.
அத்துடன் தடைப்பட்டுள்ள வடக்கு ரயில் மார்க்கத்திலான போக்குவரத்தை இன்று மாலைக்குள் வழமைக்குக் கொண்டுவர முடியும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.