வளைத்தால், திருகினால், கத்தியால் குத்தினால் பாதிப்படையாத கையடக்க தொலைபேசி திரை

வளையக்கூடிய, திருகக்கூடிய, கீறல் விழாத கத்தியால் குத்தினாலும் உடையாத 4.7 அங்குல அளவான கையடக்கத்தொலைபேசி திரையொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக யு ரியூப் தொழில் நுட்ப விமர்சகரான மார்க்கஸ் பிரவுண்லீ உரிமை கோரியுள்ளார்.

அப்பிள் தொழில் நுட்ப நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டும் தொழில்நுட்ப உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படுவதற்கு முன்னர் அவற்றை வெளியில் கசியச் செய்பவர் என பெயர் பெற்ற சோனி டிக்ஸனிடமிருந்து இந்த புதிய கையடக்கத்தொலைபேசி திரையைப் பெற்றதாக மார்க்கஸ் தெரிவித்துள்ளார்.

வளைத்து, திருகி, கத்தியால் குத்தியபோதும் அந்த கையடக்கத்தொலைபேசி திரை எதுவித பாதிப்புமின்றி இருந்ததை வெளிப்படுத்தும் வீடியோ காட்சி யு ரியூப் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் திரை நீலக்கல்லால் உருவாக்கப்பட்டதால் மிகவும் விலை கூடியது என தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor