உடுப்பிட்டி- வல்லை வீதியிலுள்ள நெசவுசாலைக்கு பின்பகுதியிலுள்ள தோட்ட கிணற்றிலிருந்து வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. தோட்ட கிணற்றினை துப்பரவு செய்த போது வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இது தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டன. 11 மோட்டார் எறிகணைகள், 25 பரா குண்டுகள், மற்றும் 69 கைக்குண்டுகள் என்பனவே மீட்கப்பட்டவையாகும்.