Ad Widget

வரும் 4 நாட்களுக்கு கன மழை

இரு நாட்களுக்கு முன், அந்தமான் கடலில் உருவான காற்று அழுத்த தாழ்வு நிலை, எதிர்பார்த்த அளவு வலுவடைந்து, தமிழகத்தை நோக்கி நகரவில்லை மறைந்து விட்டது. தற்போது, வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில், இலங்கை அருகே, புதிய காற்று அழுத்த தாழ்வு உருவாகி உள்ளது.

இது, தென்மேற்காக மேலும் நகர்ந்து, தமிழகம் அருகே நிலை கொண்டுள்ளது. என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் இலங்கையில் கரையோரப் பிரதேசங்களிலும், வடக்கு பகுதிகளிலும் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதனால் அவ்வப்போது மிகக் கனமழை பெய்யும். இலங்கையில் பரவலாக அடுத்த 3 நாட்கள் முதல் 4 நாட்கள் வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts