வருமான வரி அறவீடு செய்வதற்கான வருமான எல்லையாக நிர்ணயிக்கப்பட்ட தொகை குறைப்பு?

Income_Taxஇலங்கையில் அதிகளவானவர்களிடமிருந்து வருமான வரியை அறவீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, இதுவரை காலமும் வரி அறவீடு செய்வதற்கான வருமான எல்லையாக நிர்ணயிக்கப்பட்ட தொகை மேலும் குறைக்கப்பட்டுள்ளது.

குறைந்த வருமானம் ஈட்டுவோரும் வரி செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படக் கூடுமெனத் தெரிவிக்கப்படுகிறது.

600,000 ரூபா வருடாந்த வருமானம் ஈட்டுவோருக்கே இதுவரை காலமும் வருமான வரி அறவீடு செய்யப்பட்டது.

எனினும், தற்போது இந்தத் தொகை 400,000 ரூபாவாக குறைக்கப்பட உள்ளது.

இந்த உத்தேசத் திட்டத்திற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

வரி வருமானத்தை அதிகரித்துக் கொள்ள அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.