வயல்களில் உள்ள சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை

home_navatkuliவயல் காணிகளில் தனியார் கட்டிடங்கள் அமைப்பதற்கு அனுமதியில்லை என விவசாய அபிவிருத்தி திணைக்கள அதிகாரி ஒருவர் கூறினார்.

யாழ். நல்லூர் பிரதேச ஒருங்கிணைப்பு குழுகூட்டம் நல்லூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

நல்லூர் பிரதேச சபை ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்ரின் அலென்ரின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உரையாற்றும்போதே மேற்படி அதிகாரி இவ்வாறு கூறினார்.

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வயல் காணிகளில் தனியார் கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

1958 இலக்க சட்டத்தின் பிரகாரம் அனுமதியின்றி வயல் காணிகளில் கட்டப்படும் கட்டிடங்கள் காலம் சென்றாலும் அகற்றப்படும்’ என்று அவர் மேலும் கூறினார்.

Recommended For You

About the Author: Editor